Nourish North Virtual Classroom
A SUVADI initiative
வாட்டமுற்ற மக்கள் மீண்டும் வலிமை பெற்று வாழ்ந்திடவோர்
ஊட்டமிகு தேசம் காண்போம், ஒன்றாகக் கைகள் கோர்ப்பீர்!
தாய்மையடைவதற்கு உகந்த வயதில் உள்ள 570 மில்லியன் பெண்கள் - அதாவது மூன்று பெண்களில் ஒருவர் - இரத்தச் சோகையால் பாதிக்கப் பட்டுள்ளார்கள்.
உங்களுக்குத் தெரியுமா?
ஊட்டமிகு வடக்கு
நிகர்நிலை வகுப்பறை
தலைமுறைகளாய் தொடரும் போசணைக் குறைபாட்டினை இல்லாதொழிக்கவும்; காலநிலை நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் உலகை மாற்றவும் வழி ஒன்றே! பண்பாட்டுக்கு ஒத்திசைவான உணவு முறையை மீட்டெடுத்து பல்வகை உணவுகளை நம் நாளாந்த வாழ்வில் வழமையாக்குவோம்!
நம் உணவுப் பண்பாட்டின் தனித்துவம் கூறும் பல்வகை உணவுகளை அறிவோம்!
சிறுதானியங்கள், முழுத்தானியங்கள் நமக்கு அவசியமான நார்ச்சத்து, நுண்போசணை மூலகங்களைப் போதிய அளவிற் கொண்டுள்ளன.
விற்றமின்கள், கனியுப்புகள் மற்றும் நார்ச்சத்து போதிய அளவிற் கொண்டுள்ள கீரைகள், கிழங்குகள் தேவையான அளவில் உள்ளெடுப்போம்.
விற்றமின்கள், கனியுப்புகள் மற்றும் ஒட்சியெதிரிகளைப் போதிய அளவிற் கொண்டுள்ள பழங்கள், காய்கறிகளை தேவையான அளவில் உள்ளெடுப்போம்.
ஊட்டமிகு வடக்கு
இளம் பெண்களிடையே காணப்படும் மறை பசியை (Hidden Hunger) இல்லாமற் செய்வதன் மூலம் தலைமுறைகளாய் தொடரும் போசாக்கின்மை வட்டத்தினை இடைநிறுத்தலே இச் செயற்திட்டத்தின் இலக்காகும். இதனைச் சாத்தியமாக்க வேளாண் சூழியற் பல்வகைமையைக் காப்பதும் உணவுப் பன்மையத்தைப் பேணுவதும் அவசியமாகும்.
மேற்குறித்த செயற்திட்டத்தில் இணைந்து செயலாற்ற ஊட்டமிகு வடக்கு செயற்திட்ட இணைப்பாளர். மருத்துவர். கிரிசாந்தன் (BSMS) அவர்களை இன்றே தொடர்பு கொள்ளுங்கள். +94 77 425 2442
SUVADI - An innovation-driven social enterprise
SUVADI's mission is to leverage local capacity for innovation, research and dialogue to find solutions for the most urgent health, economic and social challenges of our time. We believe in “Transformation in time, through innovation, research and dialogue"
In 12 year-long journey, our passion for our core purpose gave us the courage to reach beyond our comfort zone to try innovative and unconventional ideas. Innovation, research and dialogue are the foundation for everything we do.